ஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது?

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஒருவனுக்கு எதனால் துன்பம் எற்படுகிறது? அவன் தான் விரும்புகின்ற பொருளின் மீது ஆசை வைப்பதால், எந்த வகையிலாவது அவனுக்கு துன்பம் ஏற்படுகிறது. ஆசை வைக்கவில்லை என்றால் அவனுக்கு துன்பம் இராது அதை உணர்த்தவே இக்குறள்.

ஒருவன் எந்தெந்தப் பொருள்களில் இருந்து ஆசையை அறுத்துக் கொண்டு எதனினும் பற்று அற்றவனாக இருக்கிறானோ, அவன் அந்தந்த பொருள்களினால் வரும் துன்பத்தை அடைவதில்லை.

எதிலும் ஒட்டாமல் இரு என்பதற்காகவே வள்ளுவப்பெருந்தகை உதடு ஒட்டாமல் இக்குறளை குறிப்பால் உணர்த்துகிறார்.