குறிச்சொற்கள் : நீதிநெறி

பொருளிருந்தால் பொருந்தியிருப்பர்

செல்வம் கொண்ட ஒருவரிடத்தில் தங்கள் தேவைக்காக, அவரை தேடி வந்து கோடான கோடி பேர் வணங்குவர். செல்வம் இல்லையெனில் வருவார் எவரும் இல்லை. இக்கருத்தை, பசுமை குலுங்க பூவொடும், காய் கனியோடும் இருக்கும் ஆலமரத்தையும், பறவை இனங்களையும் உவமையாக்கி எளிமையாக விளக்குகிறார் நூல் ஆசிரியர். ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல் சாலவே பட்சி எல்லாம் தம்குடி என்றே வாழும் வாலிபர் வந்து தேடி வந்திருப்பர் கோடா கோடி ஆலிலை யாதி போனால் அங்குவந் திருப்பார் தொடர்ந்து படிக்க

ஆட்கொல்லி

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இந்த மூன்றையும் விட்டொழித்தால் மனிதன் வாழ்வில் துன்பம் வராது, இந்த கட்டுரையில் நாம் பொன்னாசை பற்றி பார்க்க இருக்கிறோம். சிவவாக்கியர் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு மேற்கோளாக எடுத்துக்காட்ட விழைகிறோம் சிவவாக்கியர் சித்தராக இருந்தாலும் கூட உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவர் மரம் வெட்டுவதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் காலையில் வழக்கம்போல் தன்னுடைய முதற் பணியான இறைவனை வணங்கிய பின் மூங்கில் மரத்தை வெட்டும் தொடர்ந்து படிக்க

தமிழும் தனிப்பாடலும்

தமிழ் நூல்கலிள் தனிப்பாடல்களுக்கு என்று ஒரு சிறப்புண்டு. புலவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவன அவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புலவர் தான் காண்கின்ற காட்சிகளையும், அல்லது அப்போதைய சூழலுக்கேற்ப நடக்கின்ற சம்பவங்களையும், அழகுணர்ச்சிமிக்க பாடலாக வடித்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தனிப்பாடல்களில் ஓளவையாருக்கென்று தனி இடமுண்டு அவர் வாழ்வில் நடந்த ஒரு சிறு நிகழ்வை பாடலாக வடித்து தமிழுக்கு தந்துள்ளார் அதை இப்போது பார்ப்போம். ஓளவையார் வாழ்ந்த காலத்தில் ஒரூரில் ஒரு போலி வள்ளல் இருந்தான், அவன் எவர்க்கும் சிறு தொடர்ந்து படிக்க