சைவ உணவின் மேன்மை

உலகில் நாம் வாழ்வதற்கு உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது அப்படிப்பட்ட உணவு சைவ உணவாக இருப்பின் நன்று. பிற உயிரை கொன்று தின்றல் மனித இனத்துக்கு அழகல்ல

கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் (குறள்)

புற்பூண்டுகளை உன் உணவுக்காகப் படைத்திருக்கிறேன் (பைபிள்)

நீ கொடுக்கும் இரத்தம் நிறைந்த சதைகளும், எலும்புகளும் எனக்கு ஏற்புடையன அல்ல (குர் ஆன்)

இவ்வாறு அனைத்து மதத்திற்குரிய வேத நூல்கள் எடுத்துரைக்கின்றன. நம்முடைய உணவுக்கென்று இறைவனால் ஒதுக்கப்பட்டது ஓரறிவுள்ள தாவர வகைகளே, தாவர வகை உணவுகள் எளிதில் செரிமானம் அடைவதோடு மட்டுமல்லாது சாத்வீக தன்மை என்ற தெய்வீகத் தன்மையைக் கொடுக்கின்றன மனிதனின் உடல் அமைப்பானது எளிய தாவர வகை உணவுகளை ஏற்றுக் கொள்வதற்கான அமைப்பையே கொண்டுள்ளன நமது பல்வரிசை உணவுக்குழல் இவற்றை ஆய்ந்து பார்க்கும்போது தெரியும்.

மாறாக ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, போன்றவற்றின் பல்வரிசைகள் கூர்மையானதாகவும் ஊன் உண்பதற்கேற்றவாறும் அமைந்திருப்பதை அறியலாம். அதேபோல ஊன் உண்ணிகளின் அருகாமை சென்று பார்த்தால் ஒரு அருவருப்பான நாற்றத்தையும், தாவர உண்ணிகளின் அருகாமை சென்றால் இனம் புரியாத மணத்துடன் கூடிய இன்பத்தை தருவதையும் நாம் கண் கூடாக காணலாம்.

மிருகத்தை தின்பவனுக்கு மிருகபுத்தி என்று சொல்வார்கள் பெரியோர்கள். ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது யார் யார் எல்லாம் ஊன் உண்கிறார்களோ அவர்களுக்கு கொடூர மனமும், எளிதில் தவறு செய்பவர்களாகவும், பிறரை மதியாதவர்களாகவும் ஏன் கொலைகாரர்களாகவும் கூட இருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு சொல்கிறது.

ஆகவே சைவ உணவு உண்பவர்கள் சாத்வீக எண்ணங்களோடும், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ரஜோ, தாமஸ குணங்களோடும் இருப்பதை பார்க்கலாம் அதனால் உயரிய எண்ணத்தைக் கொடுக்கக்கூடிய சைவ உணவை உண்போம்.