ஸ்ரீ இராமஜெயம் தோன்றிய கதை

நம்முடைய பெரியவர்கள் நமக்கு சொல்லும் ஒரு அரிவுரை என்னவென்றால் எடுத்த காரியம் வெற்றி பெற ஸ்ரீ இராமஜெயம் எழுது என்பதுதான். அப்படிப்பட்ட ஸ்ரீ இராமஜெயம் என்ற காரிய சித்தி மந்திரம் தோன்றிய காரணம் குறித்து இங்கு காண்போம்.

இராவண வதம் முடிவுற்ற பிறகு அந்த வெற்றி செய்தியை தெரிவிக்க பேராவல் கொண்டு சொல்லின் செல்வராக இருக்கக்கூடிய அனுமன் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதா தேவியிடம் சென்றார். அங்கு சென்ற பிறகு இராமன் வெற்றி பெற்ற செய்தியை விவரிக்க சொல்லின் செல்வராக இருந்தும்கூட அனுமன் வாயிலிருந்து வார்த்தை வரவில்லை கண்ணீர் வந்தது உடனே அருகில் உள்ள மணலில் இராமனின் வெற்றியை விவரிக்கும் விதத்தில் ஸ்ரீ இராமஜெயம் என எழுதி காட்டினார் இதுவே ஸ்ரீ இராமஜெயம் தோன்றிய வரலாறு.