ஸ்ரீ காளஹஸ்தியும்-ராகு கேது பூசையும்

கோயில் சிற்ப சாஸ்திர முறைப்படி பரிகார ஸ்தலமாக இருப்பின் கல்வெட்டுகளில் இரண்டு பக்கம் பாம்பு நடுவில் சந்திரன் (அ) சூரியன் (அ) இரண்டும் உள்ள சிற்பங்களை செதுக்குவார்கள் அப்படி பார்க்கும் போது நீங்கள் அந்த மாதிரி சிற்பங்கள் வாயு ஷேத்ரத்தில் எங்கேயும் பார்கவே முடியாது, ஆனாலும் தமிழக ஜோதிட வல்லுநர்களாலும் கர்நாடக ஜோதிட வல்லுநர்களாலும் கால சர்ப தோஷ ஷேத்ரமாக மாறி சர்ப பூஜை பெறுகிவிட்டது.

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது. மேற்சொன்ன சிற்ப சாஸ்திரங்களுடன் இருக்கும் தட்சிண கைலாச பகுதியில் உள்ள கோயில்களில் இச்சிற்பங்களை காணலாம் (வெயிலிங்கால்) அப்பகுதியே எல்லா தோஷங்களுக்கும் நிவாரணம் தரும் ஷேத்ரமாகும். ஆனால், அங்கும் ஈஸ்வரனக்கு அபிஷேகம் செய்வதையே சாஸ்திரமாக கூறுகின்றனர். Ref:(kalathi mahathmiam return by maharishi parasura mamuni s/o viyasa mamuni) காலத்தி மகிமையெனும் தவிர கிரக தோஷ பூஜைகளை சொல்லவே இல்லை என்பதை அறிந்து கொள்வோமாக. அதற்காக வாயு லிங்க ஷேத்ரத்திற்கு சக்தி இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், கிரங்களுக்கு கிரக தோஷ பூஜை செய்வது தவறு.

உயர் தெய்வமான அர்த்த்நாரீஸ்வரனை தொழுது வழிபடுவதை விட, அர்த்தநாரீஸ்வரன் அருளை பெற, அவனுக்கு இஷ்டமான (அபிஷேக பிரியன்) அபிஷேகத்தையும், ருத்ரத்தையும், சமகத்தையும் சொல்லும் போது செய்யும் அபிஷேகத்தையும் செய்வதே மிக சிறந்த வழி என்று உணர்வோமாக. இந்த கிரக பூஜைகளை புரோகிதர்கள் மட்டுமே செய்ய வேண்டும் சிவாச்சாரீயர்களோ (அ) வேத வித்துக்களோ இதை செய்ய கூடாது, ஆனால் இந்த ஸ்தலத்தில் நடக்கும் தவறான வழி முறையினால் சாபம் தீர வேண்டி வருபவர்கள் சாபத்தை பெற்றுக்கொண்டு செல்லவேண்டும். இக்காரணம் தொட்டே ம்ருத்யஞ்செயத்தை ஆண்டவன் உபயயோகம் படுத்திய இரண்டு முக்கிய இடமான தட்சிணகைலாய பகுதியில் உள்ள எல்லா கோயில்களிலும் சரி, திருக்கடையூரிலே உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஸ்தலமும் சரி கிரகங்களுக்கு பூஜை செய்யப்படுவது இல்லை,காரணம் இதுவே. ஆனால் எதை தின்றால் ரோகம் போகும் என்ற எண்ணி எதையோ தின்ன போக மிக உயர்ந்த மிக உன்னதமான அர்த்தநாரீஸ்வர ஷேத்ரத்தில் கிரகதோஷ பூஜையான கால சர்ப தோஷ பூஜையை நடத்துவது மிக மிக வருத்தத்ததை தரும் விஷயம் என்பதை அறிந்து கொண்டு அதே காலத்தியில் இருந்து தென்திசை நோக்கி சுமார் 8 கீமி தொலைவில் உள்ள தட்சிணகைலாயத்தில் மட்டுமே பரிகார பூஜைகள் அதுவும் ஈஸ்வரனுக்கு மட்டும் அபிஷேகமாக செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்வோமாக.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

இடுகைகள்