சைவ உணவின் மேன்மை

உலகில் நாம் வாழ்வதற்கு உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது அப்படிப்பட்ட உணவு சைவ உணவாக இருப்பின் நன்று. பிற உயிரை கொன்று தின்றல் மனித இனத்துக்கு அழகல்ல கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள்) புற்பூண்டுகளை உன் உணவுக்காகப் படைத்திருக்கிறேன் (பைபிள்) நீ கொடுக்கும் இரத்தம் நிறைந்த சதைகளும், எலும்புகளும் எனக்கு ஏற்புடையன அல்ல (குர் ஆன்) இவ்வாறு அனைத்து மதத்திற்குரிய வேத நூல்கள் எடுத்துரைக்கின்றன. நம்முடைய உணவுக்கென்று இறைவனால் ஒதுக்கப்பட்டது தொடர்ந்து படிக்க

சின் முத்திரையின் தத்துவம்

சின் முத்திரை = சின்முத்திரை. சின் – ஞானம்; முத்திரை – அடையாளம். ஞானத்தை கையால் காட்டும் அடையாளமே சின்முத்திரை. சுட்டு விரலால் பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் வேறாக ஒதுக்கிக் காட்டப்படும் முத்திரை. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் மற்ற மூன்று விரல்களில், நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிரவிரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும் குறிக்கும். இதை பழம் பாடல் ஒன்று எடுத்துகாட்டுகிறது செம் மலர் நோன்தாள் சேரல் ஒட்டாமல் தொடர்ந்து படிக்க

ஆட்கொல்லி

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இந்த மூன்றையும் விட்டொழித்தால் மனிதன் வாழ்வில் துன்பம் வராது, இந்த கட்டுரையில் நாம் பொன்னாசை பற்றி பார்க்க இருக்கிறோம். சிவவாக்கியர் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு மேற்கோளாக எடுத்துக்காட்ட விழைகிறோம் சிவவாக்கியர் சித்தராக இருந்தாலும் கூட உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவர் மரம் வெட்டுவதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் காலையில் வழக்கம்போல் தன்னுடைய முதற் பணியான இறைவனை வணங்கிய பின் மூங்கில் மரத்தை வெட்டும் தொடர்ந்து படிக்க

திருமூலரும் திருமந்திரத்தின் சிறப்பும்

சைவம் போற்றும் அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் திருமூலர். அறுபத்துமூன்று நாயன்மார்களை அறிமுகப்படுத்தி பாடப்பெற்ற நூல் திருத்தொண்டத்தொகை, பாடியவர், நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர். அவர் பாடியது அறுபது பேர்களை, இவரது தாய் தந்தையார் மற்றும் இவர் ஆகிய மூவரையும் சேர்த்து சைவச் சான்றோர்கள் அறுபத்து மூவராக வணங்கினார்கள். அறுபது அடியார்களைப் பாடி வணங்கிய அவர் இரண்டே இரண்டு பேரைத் தான் பிரான் என்ற சொல்லைச் சேர்த்து பெருமைப் படுத்துகிறார். இது மற்ற அடியார்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு. யார் அந்த தொடர்ந்து படிக்க

தமிழும் தனிப்பாடலும்

தமிழ் நூல்கலிள் தனிப்பாடல்களுக்கு என்று ஒரு சிறப்புண்டு. புலவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிடுவன அவை. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் புலவர் தான் காண்கின்ற காட்சிகளையும், அல்லது அப்போதைய சூழலுக்கேற்ப நடக்கின்ற சம்பவங்களையும், அழகுணர்ச்சிமிக்க பாடலாக வடித்துவிடுவார்கள். இப்படிப்பட்ட தனிப்பாடல்களில் ஓளவையாருக்கென்று தனி இடமுண்டு அவர் வாழ்வில் நடந்த ஒரு சிறு நிகழ்வை பாடலாக வடித்து தமிழுக்கு தந்துள்ளார் அதை இப்போது பார்ப்போம். ஓளவையார் வாழ்ந்த காலத்தில் ஒரூரில் ஒரு போலி வள்ளல் இருந்தான், அவன் எவர்க்கும் சிறு தொடர்ந்து படிக்க