பொருளிருந்தால் பொருந்தியிருப்பர்

செல்வம் கொண்ட ஒருவரிடத்தில் தங்கள் தேவைக்காக, அவரை தேடி வந்து கோடான கோடி பேர் வணங்குவர். செல்வம் இல்லையெனில் வருவார் எவரும் இல்லை. இக்கருத்தை, பசுமை குலுங்க பூவொடும், காய் கனியோடும் இருக்கும் ஆலமரத்தையும், பறவை இனங்களையும் உவமையாக்கி எளிமையாக விளக்குகிறார் நூல் ஆசிரியர்.

ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல்
சாலவே பட்சி எல்லாம் தம்குடி என்றே வாழும்
வாலிபர் வந்து தேடி வந்திருப்பர் கோடா கோடி
ஆலிலை யாதி போனால் அங்குவந் திருப்பார் உண்டோ?

– விவேக சிந்தாமணி

பொன்னொடு மணியுண் டானால் புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு சாதியின் மணமும் செய்வர்
மன்னராய் இருந்த் பேர்கள். வகைகெட்டுப் போவாராகில்
பின்னையும் ஆரோ என்று பேசுவர் ஏசுவாரே

– விவேக சிந்தாமணி

இதே கருத்தை ஔவையார், இளமையில் வளமையாக வாழ்ந்து, பின் வறுமையில் நம்மை விட்டுவிலகாது விடியலுக்காக இருப்பவரே உண்மையான உறவு, என்கிறார். குளத்தின் வளமையை உவமையாக கொண்டு

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வர் உறவல்லர் – அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு.

– மூதுரை (ஔவையார்)

கல்லானே ஆனாலும் கைப்பொருள்ஒன் றுண்டாயின்
எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா அவன்வாயிற் சொல்

– நல்வழி (ஔவையார்)

சிவா மூர்த்தி

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன