கல்லாத பேர்களே நல்லவர்கள்

அறிஞர்களிடத்தில் வாதம் செய்து வென்று, வாதம் செய்து தோற்றவர்க்கு தண்டனை தருவது, அனைத்து காலத்திலும் இருந்த ஒன்று, சம்பந்தர் சமணர்களிடத்தும், வில்லிபுத்தூராரிடம் அருணகிரியும் வென்றதாக குறிப்புகள் உள்ளன.

நான்/நாம் கற்ற கல்வியை கொண்டு, வடமொழி பண்டிதரிடத்தில்(வல்லான்) அவர் கூறும் உபநிடதங்கள், தமிழிலேயும் உள்ளது என மேற்கோள் காட்டி அவற்றை நிரூபிப்பேன் (நாட்டுவேன்). தமிழ் அறிஞரிடமோ, வடமொழியில் நான்கு வரி வசனங்களை சொல்வேன் அவை வேதத்தில் உள்ளது என்று.

மேலும், ஞான நீதி நூல்களே முக்திபேறுக்கு வழி என்று உறைத்தால், கர்மம் (தொழில்/செய்யும் செயல்) முக்கியம் என்றும், கர்மமே என்றால் முன்கூறிய ஞானமே என்று உறைத்து, வெல்லாமல் (தன்னை/5 புலனை/உண்மை பொருளை வெல்லாமல்) எவரையும் கலக்கமுறச் (நான் உறைப்பதே சரி என என்னும் அளவுக்கு) செய்து வெல்வேன்.

நான் கற்ற (வெல்லாமல் வெல்லும்) இந்த அறிவும் செயலும் முக்தி தருமோ? தராது, ஆதலால் கல்லாத பேர்களே நல்லவர்கள் கான்.

கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள்;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன்? மதியையென் சொல்லுகேன்?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன்; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன்; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன்;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன்;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!

சிவா மூர்த்தி

About சிவா மூர்த்தி

View all posts by சிவா மூர்த்தி →

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன