பிறதொகுப்பு தொகுப்பு

ஸ்ரீ காளஹஸ்தியும்-ராகு கேது பூசையும்

கோயில் சிற்ப சாஸ்திர முறைப்படி பரிகார ஸ்தலமாக இருப்பின் கல்வெட்டுகளில் இரண்டு பக்கம் பாம்பு நடுவில் சந்திரன் (அ) சூரியன் (அ) இரண்டும் உள்ள சிற்பங்களை செதுக்குவார்கள் அப்படி பார்க்கும் போது நீங்கள் அந்த மாதிரி சிற்பங்கள் வாயு ஷேத்ரத்தில் எங்கேயும் பார்கவே முடியாது, ஆனாலும் தமிழக ஜோதிட வல்லுநர்களாலும் கர்நாடக ஜோதிட வல்லுநர்களாலும் கால சர்ப தோஷ ஷேத்ரமாக மாறி சர்ப பூஜை பெறுகிவிட்டது. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது. மேற்சொன்ன சிற்ப சாஸ்திரங்களுடன் இருக்கும் தொடர்ந்து படிக்க

திருநீற்றின் தெய்வ நலம்

சிவனடியார்களின் முக்கிய சிவ சின்னங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது திருநீறு. திருநீறின் பயன் எண்ணில் அடங்கா. பூதி அணிவது சாதனம் ஆதியில் காதணி தாமிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீதில் சிவயோகி சாதனம் தேரிலே. இப்பாடல் மூலம் திருமூலர் கூறும் கருத்துயாதெனில், சிவனடியார்கள் அனிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் 3 ஆகும் அதில் திருநீறு முதன்மையும் முதலும், இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும், உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என தொடர்ந்து படிக்க

வாசுகி அம்மையார்

ஒன்றரையடி குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும், கருத்துகளை மக்களுக்காக தந்தவர். திருவள்ளுவர் சிலை உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார். யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின் துணைவியாரின் பெயர் தொடர்ந்து படிக்க

சைவ உணவின் மேன்மை

உலகில் நாம் வாழ்வதற்கு உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது அப்படிப்பட்ட உணவு சைவ உணவாக இருப்பின் நன்று. பிற உயிரை கொன்று தின்றல் மனித இனத்துக்கு அழகல்ல கொல்லான் புலால் மறுத்தானை கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (குறள்) புற்பூண்டுகளை உன் உணவுக்காகப் படைத்திருக்கிறேன் (பைபிள்) நீ கொடுக்கும் இரத்தம் நிறைந்த சதைகளும், எலும்புகளும் எனக்கு ஏற்புடையன அல்ல (குர் ஆன்) இவ்வாறு அனைத்து மதத்திற்குரிய வேத நூல்கள் எடுத்துரைக்கின்றன. நம்முடைய உணவுக்கென்று இறைவனால் ஒதுக்கப்பட்டது தொடர்ந்து படிக்க

சின் முத்திரையின் தத்துவம்

சின் முத்திரை = சின்முத்திரை. சின் – ஞானம்; முத்திரை – அடையாளம். ஞானத்தை கையால் காட்டும் அடையாளமே சின்முத்திரை. சுட்டு விரலால் பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் வேறாக ஒதுக்கிக் காட்டப்படும் முத்திரை. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் மற்ற மூன்று விரல்களில், நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிரவிரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும் குறிக்கும். இதை பழம் பாடல் ஒன்று எடுத்துகாட்டுகிறது செம் மலர் நோன்தாள் சேரல் ஒட்டாமல் தொடர்ந்து படிக்க