இலக்கியம் தொகுப்பு

அபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கடவூர் எனும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவள் அன்னை அபிராமி. “ராமி” என்றால் எழில் கோலத்தால் ரமிக்கச் செய்பவள். “அபிராமி” என்றால் அளவில்லாத தன் பேரழகால் அதிகமாக ரமிக்கச் செய்பவள் என்பது பொருள். கலைமகள் அன்னையை போற்றி வழிபட்ட தலமாகும் இது. இத்தலத்தின் பிரதான மூர்த்தியாக விளங்குபவர் அமிர்தகடேச்சுரர்.  இப்பெருமான் மார்கண்டேயனை எமனிடமிருந்து காக்க, அவனை காலால் உதைத்து “காலசம்ஹாரமூர்த்தி” எனவும் பெயர் பெற்று விளங்குகிறார். இப்புனித ஊரில் அல்லும் பகலும் அம்பிகையை தியானித்து தொடர்ந்து படிக்க

சும்மா இருப்பதும் சுகமே

நம் அன்றாட வாழ்வில் சும்மா இருத்தல் என்ற வார்த்தையை பல சமயங்களில் பயன்படுத்துகிறோம். ஒருவர் நமக்கு விரும்பத்தகாத செய்திகளை பேசும் போது சும்மா இரு என்று அவர் பேசுவதை தடை செய்கிறோம். வயதானவர் வேலைகளை செய்யும் போதும், குழந்தைகள் குறும்புகளை செய்யும் போதும், காரணமின்றி ஒருவர் பேசும் போதும், அவசியமில்லாத செயல்களை செய்யும் போதும் அதை தடுப்பதற்காக அவர்களை சும்மா இருங்கள் என்கிறோம். சில சமயங்களில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல், ஓய்வெடுத்தலை சும்மா இருக்கின்றேன் என்று தொடர்ந்து படிக்க

சிவாயநம – சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்

நமசிவாய, சிவாயநம இவ்விரண்டிலும் 5 எழுத்துக்களே, எழுத்துக்கள் இடம்மாறி உள்ளனவே அல்லாமல் எழுத்துக்கள் மாறவில்லை. சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம் யாதெனில் ‘ந’ என்னும் நகரவெழுத்து இறைவனின் மறைப்பாற்றலை உணர்த்தும் எழுத்து. படைக்கும் இறைவன் உயிர்களின் முற்பிறவிகளின் நிகழ்ந்த கர்மவினைகளை உயிர்களிடத்து மறைத்து அருள்கிறான். இறைவன் தனக்கே உரிய பேராற்றாலால், செயலால் உயிர் உய்ந்து உய்யும் பொருட்டு தன் அருட்சக்தியான திரோதான சக்தியைக் கொண்டு அம் மறைப்பினைச் செய்கிறான். இம் மறைப்பாற்றல் இல்லையெனில் உயிர்களானது பாவங்களை அறிந்து தொடர்ந்து படிக்க

நாதன் நாமமும் அதன் பயனும்

நாதன் நாமம் திருஞானசம்பந்தப் பெருமான் நாதன் நாமம் நமச்சி வாயவே என நமச்சிவாயப் திருப்பாசுரத்தில் பாடியிருக்கின்றார். இந்த பஞ்சாக்கரமே இறைவனின் நாமம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. அகார முதலாக ஐம்பத்தொன் றாகி உகார முதலாக வோங்கி யுதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்த் தேறி நகார மதலாகும் நந்தியின் நாமமே என திருமுலர் திருமந்திரதின் வாயிலாக, சிவபெருமானின் திருநாமம் நமசிவாயவே என மேலும் உறுதிபடுத்துகிறார். இங்கு நந்தி என்பது சிவபெருமானையும், நகார என்பது பஞ்சாககரத்தையும் குறிக்கும். நற்றுணை யாவது நமச்சி தொடர்ந்து படிக்க

சின் முத்திரையின் தத்துவம்

சின் முத்திரை = சின்முத்திரை. சின் – ஞானம்; முத்திரை – அடையாளம். ஞானத்தை கையால் காட்டும் அடையாளமே சின்முத்திரை. சுட்டு விரலால் பெருவிரல் அடியைச் சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் வேறாக ஒதுக்கிக் காட்டப்படும் முத்திரை. பெருவிரல் இறைவனையும், சுட்டுவிரல் ஆன்மாவையும் மற்ற மூன்று விரல்களில், நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிரவிரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும் குறிக்கும். இதை பழம் பாடல் ஒன்று எடுத்துகாட்டுகிறது செம் மலர் நோன்தாள் சேரல் ஒட்டாமல் தொடர்ந்து படிக்க