திருமதி. சிவசங்கரி படைப்புகள்

அபிராமி அருள் பெற்ற அபிராமி பட்டர்

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருக்கடவூர் எனும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவள் அன்னை அபிராமி. “ராமி” என்றால் எழில் கோலத்தால் ரமிக்கச் செய்பவள். “அபிராமி” என்றால் அளவில்லாத தன் பேரழகால் அதிகமாக ரமிக்கச் செய்பவள் என்பது பொருள். கலைமகள் அன்னையை போற்றி வழிபட்ட தலமாகும் இது. இத்தலத்தின் பிரதான மூர்த்தியாக விளங்குபவர் அமிர்தகடேச்சுரர்.  இப்பெருமான் மார்கண்டேயனை எமனிடமிருந்து காக்க, அவனை காலால் உதைத்து “காலசம்ஹாரமூர்த்தி” எனவும் பெயர் பெற்று விளங்குகிறார். இப்புனித ஊரில் அல்லும் பகலும் அம்பிகையை தியானித்து தொடர்ந்து படிக்க

கருணை நெறி

தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத மனிதர்கள், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உருவங்களுக்கு, தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத உயிர்களைப் பலிகொடுக்கிறார்கள். தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தெரிந்த மனிதர்களாக இருந்தால், தங்களுக்கு வந்திருக்கும் நோய் என்ன? அது எப்படி வந்தது? அதை எப்படிப் போக்குவது? என்ன மருந்து சாப்பிடுவது? என்று தெரிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அப்படிக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாமையால்தான், சில உருவங்கள் தங்களைக் காப்பாற்றும் என நினைத்து அதனிடம் பேசுகிறார்கள். அந்த உருவங்களும் தொடர்ந்து படிக்க

திருநீற்றின் தெய்வ நலம்

சிவனடியார்களின் முக்கிய சிவ சின்னங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது திருநீறு. திருநீறின் பயன் எண்ணில் அடங்கா. பூதி அணிவது சாதனம் ஆதியில் காதணி தாமிர குண்டலம் கண்டிகை ஓதி அவர்க்கும் உருத்திர சாதனம் தீதில் சிவயோகி சாதனம் தேரிலே. இப்பாடல் மூலம் திருமூலர் கூறும் கருத்துயாதெனில், சிவனடியார்கள் அனிய வேண்டிய முக்கிய சிவ சின்னங்கள் 3 ஆகும் அதில் திருநீறு முதன்மையும் முதலும், இரண்டாவதாக செம்பிலான குண்டலத்தை காதிலும், உருத்திராக்க மாலையை கழுத்திலும் அணிய வேண்டும் என தொடர்ந்து படிக்க

வாசுகி அம்மையார்

ஒன்றரையடி குறளின் மூலம் இவ்வுலகை தெளிவுறச் செய்ய குரல் தந்த மகான் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இவர் 1330 ஒன்றரை அடி குறளின் மூலம் பல ஆழ்ந்த சிந்தனைகளையும், கருத்துகளை மக்களுக்காக தந்தவர். திருவள்ளுவர் சிலை உலகில் உள்ள அத்தனை உயிரினத்துக்காக ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒருவருக்கு மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார். யார் அந்த பெருமைக்குரியவர்? வேறுயாருமில்லை அவரது மனைவிக்காகத்தான் அந்த பாட்டினை எழுதினார். அந்த தெய்வ புலவரின் துணைவியாரின் பெயர் தொடர்ந்து படிக்க

ஆட்கொல்லி

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை, இந்த மூன்றையும் விட்டொழித்தால் மனிதன் வாழ்வில் துன்பம் வராது, இந்த கட்டுரையில் நாம் பொன்னாசை பற்றி பார்க்க இருக்கிறோம். சிவவாக்கியர் வாழ்வில் நடந்த சம்பவத்தை இங்கு மேற்கோளாக எடுத்துக்காட்ட விழைகிறோம் சிவவாக்கியர் சித்தராக இருந்தாலும் கூட உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கை உடையவர். அவர் மரம் வெட்டுவதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் காலையில் வழக்கம்போல் தன்னுடைய முதற் பணியான இறைவனை வணங்கிய பின் மூங்கில் மரத்தை வெட்டும் தொடர்ந்து படிக்க