சிவா மூர்த்தி படைப்புகள்

பொருளிருந்தால் பொருந்தியிருப்பர்

செல்வம் கொண்ட ஒருவரிடத்தில் தங்கள் தேவைக்காக, அவரை தேடி வந்து கோடான கோடி பேர் வணங்குவர். செல்வம் இல்லையெனில் வருவார் எவரும் இல்லை. இக்கருத்தை, பசுமை குலுங்க பூவொடும், காய் கனியோடும் இருக்கும் ஆலமரத்தையும், பறவை இனங்களையும் உவமையாக்கி எளிமையாக விளக்குகிறார் நூல் ஆசிரியர். ஆலிலை பூவும் காயும் அளிதரும் பழமும் உண்டேல் சாலவே பட்சி எல்லாம் தம்குடி என்றே வாழும் வாலிபர் வந்து தேடி வந்திருப்பர் கோடா கோடி ஆலிலை யாதி போனால் அங்குவந் திருப்பார் தொடர்ந்து படிக்க

கல்லாத பேர்களே நல்லவர்கள்

அறிஞர்களிடத்தில் வாதம் செய்து வென்று, வாதம் செய்து தோற்றவர்க்கு தண்டனை தருவது, அனைத்து காலத்திலும் இருந்த ஒன்று, சம்பந்தர் சமணர்களிடத்தும், வில்லிபுத்தூராரிடம் அருணகிரியும் வென்றதாக குறிப்புகள் உள்ளன. நான்/நாம் கற்ற கல்வியை கொண்டு, வடமொழி பண்டிதரிடத்தில்(வல்லான்) அவர் கூறும் உபநிடதங்கள், தமிழிலேயும் உள்ளது என மேற்கோள் காட்டி அவற்றை நிரூபிப்பேன் (நாட்டுவேன்). தமிழ் அறிஞரிடமோ, வடமொழியில் நான்கு வரி வசனங்களை சொல்வேன் அவை வேதத்தில் உள்ளது என்று. மேலும், ஞான நீதி நூல்களே முக்திபேறுக்கு வழி என்று தொடர்ந்து படிக்க

ஸ்ரீ காளஹஸ்தியும்-ராகு கேது பூசையும்

கோயில் சிற்ப சாஸ்திர முறைப்படி பரிகார ஸ்தலமாக இருப்பின் கல்வெட்டுகளில் இரண்டு பக்கம் பாம்பு நடுவில் சந்திரன் (அ) சூரியன் (அ) இரண்டும் உள்ள சிற்பங்களை செதுக்குவார்கள் அப்படி பார்க்கும் போது நீங்கள் அந்த மாதிரி சிற்பங்கள் வாயு ஷேத்ரத்தில் எங்கேயும் பார்கவே முடியாது, ஆனாலும் தமிழக ஜோதிட வல்லுநர்களாலும் கர்நாடக ஜோதிட வல்லுநர்களாலும் கால சர்ப தோஷ ஷேத்ரமாக மாறி சர்ப பூஜை பெறுகிவிட்டது. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது. மேற்சொன்ன சிற்ப சாஸ்திரங்களுடன் இருக்கும் தொடர்ந்து படிக்க

சும்மா இருப்பதும் சுகமே

நம் அன்றாட வாழ்வில் சும்மா இருத்தல் என்ற வார்த்தையை பல சமயங்களில் பயன்படுத்துகிறோம். ஒருவர் நமக்கு விரும்பத்தகாத செய்திகளை பேசும் போது சும்மா இரு என்று அவர் பேசுவதை தடை செய்கிறோம். வயதானவர் வேலைகளை செய்யும் போதும், குழந்தைகள் குறும்புகளை செய்யும் போதும், காரணமின்றி ஒருவர் பேசும் போதும், அவசியமில்லாத செயல்களை செய்யும் போதும் அதை தடுப்பதற்காக அவர்களை சும்மா இருங்கள் என்கிறோம். சில சமயங்களில் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாமல், ஓய்வெடுத்தலை சும்மா இருக்கின்றேன் என்று தொடர்ந்து படிக்க

சிவாயநம – சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம்

நமசிவாய, சிவாயநம இவ்விரண்டிலும் 5 எழுத்துக்களே, எழுத்துக்கள் இடம்மாறி உள்ளனவே அல்லாமல் எழுத்துக்கள் மாறவில்லை. சைவ சித்தாந்தம் கூறும் விளக்கம் யாதெனில் ‘ந’ என்னும் நகரவெழுத்து இறைவனின் மறைப்பாற்றலை உணர்த்தும் எழுத்து. படைக்கும் இறைவன் உயிர்களின் முற்பிறவிகளின் நிகழ்ந்த கர்மவினைகளை உயிர்களிடத்து மறைத்து அருள்கிறான். இறைவன் தனக்கே உரிய பேராற்றாலால், செயலால் உயிர் உய்ந்து உய்யும் பொருட்டு தன் அருட்சக்தியான திரோதான சக்தியைக் கொண்டு அம் மறைப்பினைச் செய்கிறான். இம் மறைப்பாற்றல் இல்லையெனில் உயிர்களானது பாவங்களை அறிந்து தொடர்ந்து படிக்க